அதிர்ச்சி சம்பவம்! திருமண ரிஸப்ஷன் மேடையில் மணமகள் மயங்கி விழுந்து மூளைச்ச்சாவு!
கர்நாடகாவின் கோலார் நகரில் கல்யாண வரவேற்பில், மணமகள் மூளைச்சாவு அடைந்த சோக நிகழ்ச்சி அனைவரையும் உலுக்கிவிட்டது.
பெங்களூரு: வாழ்க்கையில் சில நேரங்களில் தாங்க முடியாத சோகமான விபத்துகள் ஏற்படுகின்றன. கல்யாண வரவேற்பில், மணமகள் மூளைச்சாவு அடைந்த சோக நிகழ்ச்சி அனைவரையும் உலுக்கிவிட்டது.
கர்நாடகாவின் கோலார் நகரில் சைத்ரா என்ற 26 வயது பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மாப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் அனைவரும் மேடையை நோக்கி ஓடினார்கள். பின்னர் சைத்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சைத்ராவின் உறவினர் நாகரத்னா கூறுகையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் சைத்ராவை சோதித்து பார்த்த பிறகு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரின் மனதையும் உலுக்கியது.
மேலும் படிக்க | மேட்ரிமோனி மூலம் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘காதல் மன்னன்’!
இருப்பினும், மகள் மூளைச்சாவு அடைந்ததால், சைத்ராவின் பெற்றோர் மனம் உடைந்த போதிலும் சமூகத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் வகையில் ஒரு முடிவை எடுத்தனர். மூளைச்சாவு அடைந்த மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சைத்ராவின் பெற்றோர் முடிவு செய்தனர். பின்னர் சைத்ரா உடல் தகனம் செய்யப்பட்டது
சைத்ரா சிறுவயதிலிருந்தே படிப்பில் மிகவும் புத்திசாலியாக இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். வீட்டில் அவள் ஒரே பெண். பெங்களூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்துவிட்டு, பி.எட் படிக்கத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவள் விரிவுரையாளராக ஆக விரும்பினாள்.
மேலும் படிக்க | Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR