கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 11 பேர் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து கடந்த ஆண்டு, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அவர்கள் 11 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிருப்தியில் இருந்த 11 பேரும், பா.ஜ.க-வில் இணைந்தனர். இதையடுத்து, கர்நாடகாவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அப்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்தது.


இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா பிரசாரத்தின் போது உறுதி அளித்திருந்தார். அதன்படி இன்று எடியூரப்பா தனது மந்திரி சபையை விரிவாக்கம் செய்தார். எஸ்.டி. சோமசேகர், ரமேஷ் ஜர்கிகோலி, ஆனந்த் சிங், சுதாகர், பிராத்தி பசவராஜ், சிவராம் ஹெப்பர், பி.சி.பாட்டீல், கே.கோபாலய்யா, கே.சி.நாராயண கவுடா, ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் ஆகிய 10 பேர் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 



ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில், புதிய மந்திரிகளுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் 34 பேர் கொண்ட மந்திரிசபையின் பலம், முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்த்து 28 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளது.