Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்
Karnataka Election Result 2023: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலை தொடர்வதால், அக்கட்சி முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது
சென்னை: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை நிலவும் நிலையில், ஆட்சியமைக்கும் வரை சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க தமிழ்நாட்டை தேர்வு காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி இருக்கும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உறுப்பினர்களை தங்க வைப்பது பாதுகாப்பானது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிரது.
விமான நிலையம் அருகே தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையின் கிழக்குக் கடற்கரையோரம் விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, யார் முதலமைச்சர்? என்ற குழப்பத்தையும் தீர்க்க காங்கிரஸ் திட்டம் வகுத்து வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் யார் என்பதற்கான போட்டியும் தொடங்கிவிட்டது.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் இருக்கும் காங்கிரஸ் தொண்ட ஒருவர், சித்தராமையா முதல்வர் என்று மார்பில் பச்சை குத்திக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
யார் முதலமைச்சர்? சித்தராமையா? டிகே சிவகுமார்?
கர்நாடகாவில் பெரும்பான்மையை எட்டியதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் என இரண்டு முதல்வர்களை உருவாக்குவதற்கான சூத்திரத்தை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், அதன்பிறகு இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதலமைச்சராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Election Result 2023: 224இல் எத்தனை காங்கிரசுக்கு? பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?
வெற்றியை நோக்கி கர்நாடக காங்கிரஸ்
124 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 69 தொகுதிகளிலும், மஜத 24 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன என்னும் நிலையில், காங்கிரஸ் தனது புதிய எம்.எல்.ஏக்களை பாதுக்காக்கும் பணிகளை தொடங்கிவிட்டது.
ஆட்சியமைக்க காங்கிரஸ் நாளை உரிமை கோருகிறது
காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெறும் சூழலில் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க நாளை காங்கிரஸ் உரிமை கோரும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | CM Of Karnataka: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸின் புதிய ஃபார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ