Karnataka Election Result 2023: ஆட்சி அமைக்கப்போவது யார்? மும்முனைப் போட்டி..!
கர்நாடக தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது இன்று மதியத்துக்குள் தெரியவரும். காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக்க நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் களம் கண்டன. பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்திருந்தாலும், தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது.
யார் ஆட்சி அமைக்கலாம்?
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப் பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க முடியும்.
பாஜக vs காங்கிரஸ் vs மஜத
இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. 113 தொகுதிகள் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சி அமைத்துவிடும். ஒருவேளை சில தொகுதிகள் குறைவாக இருந்தால் சுயேட்சைகள் அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முடிவில் இருக்கிறது. இதே எண்ணத்தில் தான் காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. பெரும்பான்மைக்கு குறைவான தொகுதிகளை பெற்றால் குமாரசாமியுடன் கூட்டணி அமைப்பது குறித்து அக்கட்சி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
தற்போதைய சூழலில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும்பான்மை பெற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன. எனவே ஆட்சி அமைக்க போதுமான இடங்களை இரு கட்சிகளும் பெறுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
முடிவுகள் எப்போது தெரியும்?
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும். காலை 10 மணிக்குப் பிறகு தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதும், 1 மணிக்குள் யார் ஆட்சி அமைக்கலாம் என்பதும் தெரிய வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ