Karnataka Election Result: முதல்வராக யார் வருவார் என்பதை தெரிந்துகொள்ள, காங்கிரஸ் கட்சி பிரத்யேக பார்முலாவை தயாரித்துள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை அடைந்துவிடும் என்று எதிர்பார்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் முதல் வெற்றியை பதிவு செய்த காங்கிரஸ்


சல்லகேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரகுமூர்த்தி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகரில் பாஜகவிற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 962 வாக்குகளுடன் மூன்றாம் இடம்.


கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான KGF தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூப கலா முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் அஷ்வினி சம்பங்கி பின்னடைவை சந்தித்துள்ளார். 


கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியான நிலையில், தங்களது வேட்பாளர்களை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு அழைத்து வர காங்கிரஸ் திட்டம் திட்டமிட்டிருக்கிறது.


மேலும் படிக்க | Election Result 2023: 224இல் எத்தனை காங்கிரசுக்கு? பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?


கட்சித்தாவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


மே 10 அன்று, கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவானது. இம்முறை மாநிலத்தில் 73.19 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்குகள் எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது முதல், காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.


யார் முதலமைச்சர்? சித்தராமையா? டிகே சிவகுமார்? 


கர்நாடகாவில் பெரும்பான்மையை எட்டியதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில்  இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் என இரண்டு முதல்வர்களை உருவாக்குவதற்கான சூத்திரத்தை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், அதன்பிறகு இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதலமைச்சராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Karnataka Election Result 2023 Live: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்..! காங்கிரஸ் முன்னிலை


காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. முதல்கட்ட நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காலை 10 மணி வரை நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.


டிகே சிவகுமாரின் டிவிட்டர் பதிவு


காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வரும் செய்திகளுக்கு மத்தியில், டிகே சிவகுமாரின் டிவிட்டர் பதிவு வைரலாகிறது. அதில், எனது சகாக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார். 



சித்தராமையா மகன் அறிக்கை


முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகனுமான யதீந்திர சித்தராமையா, வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் அடுத்த முதல்வராக தனது தந்தையே வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். கர்நாடகாவின் நலன் கருதி, எனது தந்தை முதல்வராக வேண்டும் என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.


பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க எதையும் செய்வோம் என்று கூறினார். மாநில நலன் கருதி எனது தந்தை முதல்வராக வேண்டும் என்ற அவரது கருத்து, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலை வெளிப்படுத்த கட்டியம் கூறுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன.


மேலும் படிக்க | Election Result 2023: 224இல் எத்தனை காங்கிரசுக்கு? பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ