முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு...? ஆனால் சிவகுமாருக்கும் நல்ல செய்தி இருக்கு!
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், கட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்த முடிவும் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மே 13) வெளியாகின. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகால போக்குகளில் இருந்து காங்கிரஸ் அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. கிட்டத்தட்ட 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை 37 தொகுதிகளை பிடித்த ஜேடிஎஸ் கட்சி இம்முறை 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது.
கர்நாடகாவின் நிலைமை வேறு
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வது கடினமான பணியாக இருக்கும். ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைப் போன்று இல்லாமல், கட்சி தனது கடைசி தேர்தல் வெற்றிகளில் இளைஞர்களை விட அனுபவத்தைத் தேர்ந்தெடுக்கும் என கூறப்படுகிறது, கர்நாடக மாநிலத்தில் நிலைமை வேறுபட்டது.
பிரபலமானவர் சித்தராமையா தான்!
கர்நாடகாவில், மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் மாநில பிரிவு தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருமே காங்கிரஸின் உயர் நிர்வாகிகளுக்கு விருப்பமானவர்கள். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் எந்த அவமரியாதையோ அலட்சியமோ காட்டவில்லை. சிவக்குமார் கட்சியின் விருப்பமானவராக கருதப்பட்டாலும், சித்தராமையா இன்னும் மாநிலத்தில் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவராகவும், கூட்டத்தை இழுப்பவராகவும் கருதப்படுகிறார்.
அதிகாரப் பகிர்வு
எனவே, மூத்த காங்கிரஸ் சித்தராமையா அடுத்த கர்நாடக முதல்வராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்காக பரவலாகப் பாராட்டப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் நல்ல வெகுமதி அளிக்கப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்த முடிவும் எட்டப்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு முதலில் பெரிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும், பின்னர் சில காலம் கழித்து அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
73.19% வாக்குகள் பதிவாகியிருந்தது
இந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த புதன்கிழமை (மே 10) நடைபெற்றது. 73.19% வாக்குகள் பதிவாகின என்று அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ