ஓலா, ஊபர் செயலிகள் மூலம் கார், ஆட்டோக்களை புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது. புதிய டாக்ஸி கட்டணத்தில் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவை அடங்கும். இரவு நேர பயணத்திற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள புதிய கட்டணம்


ஓலா, ஊபர் டாக்சி சேவைகளுக்கான கட்டண திருத்தம் குறித்த முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ள நிலையில், முன்னதாக, இது தொடர்பாக நடத்தப்பட்ட முக்கிய கூட்டம், கர்நாடக மாநில துணை செயலர் புஷ்பா தலைமையில் நடத்தப்பட்டது. இதில் வாகனங்களின் விலையில் அடிப்படையில் கட்டண முறையை மூன்று பகுதிகளாக பிரித்து நிர்ணயத்துள்ளனர். புதிய கட்டணம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது


விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை


நகரத்தில் வழங்கப்படும் டாக்ஸி சேவையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்துள்ள புகார்களை அடுத்தும், ஒரே மாதிரியான கட்டண முறையை அமல்படுத்துவது இது போன்ற புகார்களை குறைக்க உதவும் என்ற நோக்கிலும், கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  கூறிய கர்நாடக அரசு, இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


புதிய கட்டண விபரம்


1. ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆன வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நாலு கிலோ மீட்டருக்கு ரூபாய் 100 என்ற அளவிலும், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூபாய் 24 என்று அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


2. ₹10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரையிலான விலை கொண்ட வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 4 கிலோ மீட்டருக்கு ₹115 என்ற அளவில் அளவிலும், கூடுதல் கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் ₹28 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


3. ₹15 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நாலு கிலோ மீட்டருக்கு ₹130 என்ற அளவில் கூடுதல் கிலோமீட்டருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ₹32 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.


மேலும் படிக்க | வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!


டாக்ஸியில் அனுமதிக்கப்படும் லக்கேஜ் அளவுகள்


குறிப்பிட்டு அளவு சாமான்களை எடுத்துச் செல்ல கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது. டாக்ஸியில் 120 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்லலாம்.


காத்திருப்பு கட்டண விவரம்


காத்திருப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை, முதல் ஐந்து நிமிடங்களுக்கு காத்திருப்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. ஆனால் அதற்குப் பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ₹1 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 5 சதவீத ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும்.


இரவு நேர கட்டண விபரம்


இரவு நேர கட்டணத்தை பொறுத்தவரை, இதற்கான கூடுதல் கட்டணம் கட்டணத்தில் 10% என்ற அளவில் இருக்கும்.


முந்தைய கட்டண விபரம்


Ola மற்றும் Uber உள்ளிட்ட ஆப்-சார்ந்த வண்டிகளுக்கான முந்தைய கட்டண திருத்தம் 2021ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதில், வாகனங்களின் விலையின் அடிப்படையில், 4 பிரிவுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்தது. சிறிய வண்டிகள் (ரூ. 5 லட்சம் வரை விலையுள்ள வாகனங்கள்) முதல் 4 கி.மீ.க்கு ரூ.75 என்ற அளவிலும், 5-10 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.100 என்ற அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான  வாகனங்களுக்கு 4 கி.மீ.க்கு குறைந்தபட்சம் ரூ.120  என்ற அளவிலும் வசூலிக்கப்பட்டது. சொகுசு வண்டிகள் எனப்படும் ரூ. 16 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள வாகனங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் முதல் 4 கி.மீ.க்கு ரூ.150 என்ற அளவில் வசூலிக்கப்பட்டது.


மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ