ஊழல் ரேங்கிங்... கர்நாடகாவுக்கு முதல் இடம் கொடுத்த ராகுல் காந்தி
நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகாதான் இருக்கிறதென்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். தற்போது அந்தப் பாத யாத்திரை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அப்போது பேசிய ராகுல்காந்தி, “நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளத. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது . இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்
முன்னதாக மைசூரில் உள்ள சுத்தூர் மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவராத்திரி ஸ்ரீ தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அதுமட்டுமின்றி கோயில், மசூதி, தேவாலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார் ராகுல் காந்தி. இதற்கிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கின்றனர். இதற்காக சோனியா காந்தி மைசூர் விமான நிலையத்திற்கு இன்று வந்தார்.
அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவக்குமார் வரவேற்றார். அக்டோபர் 6ஆம்தேதி மாண்டியாவில் நடைபெறும் பாத யாத்திரையில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ