கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் MLA-களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று MLA-க்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கவே இவ்வாறு செய்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில்,சொகுசு விடுதியில் இரவு விருந்தின்போது பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க.வுக்கு செல்லவிருக்கும் தங்கள் திட்டத்தை கட்சித் தலைமையிடம் கூறியதாக ஆனந்த்சிங் மீது மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மதுபாட்டிலை உடைத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த நிலையில் ஆனந்த்சிங் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



எம்.எல்.ஏ.க்களிடையே மேலும் பிளவு ஏற்படாமல் தடுத்து நிறுத்த, அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.