கர்த்தார்ப்பூர் சாலைவழி சரி; ஆனால், பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை இல்லை என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்த்தார்ப்பூர் சாலைவழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு தொடங்கும் எனப் பொருள் கொள்ள முடியாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  


சீக்கிய குருவான குருநானக் தேவ் தனது கடைசி காலத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் வசித்தார். முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12 ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூருக்குச் சென்றுவர வசதியாகச் சாலை வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 


இந்தக் கோரிக்கையைப் பல ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில் இப்போதுதான் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடங்கப்படுவதாலேயே இரு நாடுகளுக்கிடையிலான பேச்சு தொடங்கும் எனக் கருத முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்துவது என்பது நடக்காத ஒன்று என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "இருதரப்பு உரையாடல் மற்றும் கார்த்தார்பூர் நடைபாதல் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக, பல வருடங்களாக, இந்தியாவின் அரசாங்கம் இந்த கார்டர்பூர் நடைபாதையை கேட்டு வருகிறது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். முதல் தடவையாக பாக்கிஸ்தான் இதற்கு சாதகமான பதிலளித்தது. "


"ஆனால் இது இருதரப்பு உரையாடல் மட்டுமே தொடங்கும் என்று அர்த்தமல்ல. இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நாம் எப்போதும் பயங்கரவாதமாக பேசுகிறோம், பேச்சுவார்த்தைகள் ஒன்றாக செல்ல முடியாது. பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைக்கும் தருணத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படலாம் "என வெளியுறவு அமைச்சர் கூறினார்.


இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்ததை இந்தியா நிராகரித்தது. இதற்க்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால், இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாதது குறிப்பிடத்தக்கது!