காசி - மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிவனுக்கான சிறு கோவிலாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரணாசி - இந்தூர் இடையே காசி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த ரயிலின் பி5 கோச்சில் 64வது சீட் எண்ணில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வண்ணமயமான காகிதங்கள் ஒட்டப்பட்டு, சிவன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.


கடவுள் படங்களை ஒட்டி மாலையணிவித்து ரயில் ஊழியர்கள் வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்காக இந்த சீட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


முதல் நாள் பயணத்துக்காக பிரத்யேகமாக ரயிலில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவை நிரந்தரமாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.