புது டெல்லி ரயில் நிலையத்தில் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ரயில் புது டெல்லி ரயில் நிலையத்தில் 5-வது தடத்திற்கு சுமார் 2 மணிக்கு வந்தது. அப்பொழுது பயணிகள் அனைவரும் இரங்கி சென்றனர். அதன் பிறகு 3.57 மணிக்கு ரயில் சுத்தம் செய்வதற்காக இயக்கப்பட்டது. அப்பொழுது ரயில் என்ஜினின் கடைசி சக்கரம் தடம் புரண்டது. ஆனால் காயம் யாருக்கும் ஏற்படவில்லை.


கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் ரயில் பயணிகள் மிகுந்த அச்சம் அடைத்துள்ளனர். புது டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2500 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சுமார் 5 லட்சம் மக்கள் புது டெல்லி ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.