சமீபத்தில் காஷ்மீரில் நடத்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹன் வானி சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பர்ஹான் வானி இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர், பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது. 


இதுவரை இந்த கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40-ஐ எட்டி உள்ளது. 3100 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்கனவே இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காஷ்மீரில் கேபிள் டிவி சேவை முடக்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை, உள்ளூர் பத்திரிக்கைகள் அரசால் முடக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் டிவி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.