272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானின் பொது தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு இடையே நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அதிக இடங்களை பிடித்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதுவரை இம்ரான் கானின் கட்சி 119 இடங்களிலும், முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும், மற்றவை 52 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைக்க மொத்தம் 137 தொகுதிகள் வேண்டும். தற்போது நிலவரப்படி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இம்ரான் கானுக்கு பிரகாசமாக உள்ளது.


இதுகுறித்து பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி தலைவர் இம்ரான் கூறியது, நான் பிரதமர் மாளிகையில் இருக்கபோவது இல்லை. பிரதமர் வீட்டை கல்வித்துறை நிலையமாகவும், ஆளுநர் இல்லத்தை பொது இடமாகவும் பயன்படுத்துவோம். மற்ற ஆட்சியாளர்கள் நாட்டை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மாளிகை, பங்களா, வெளிநாட்டு பயணங்கள் என வரி பணத்தை வீண்செலவு செய்தனர். ஆனால் நாங்கள் மக்களின் வரி பணத்தை வீண் செலவு செய்யாமல் முதலீடு செய்து பாதுகாப்போம். 


பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை நாட்டின் மிக பெரிய சவாலாக இருக்கிறது. எனவே அண்டை நாட்டுடன் எங்கள் உறவு ஆக்கபூர்வமாக இருக்கும். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கிடையே உறவு மேம்பட இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம் என்றும். சீனாதான் எங்களுக்கு ரோல் மாடல் என்றும் கூறினார்.