கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் எந்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்னதினம் நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.


தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.


இந்நிலையில் அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பிற மாநில முதல் மந்திரிகளுக்கோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கோ அழைப்பு இல்லை. அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என கூறினார்.


இதனிடையே, பிப்ரவரி 16 ஆம் தேதி அர்விந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பேபி மஃப்ளர்மேன் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது அதில்.,