கே.வி., பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் துவங்கியது!
கேந்திரிய வித்யாலயா எனப்படும் கே.வி., பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
கேந்திரிய வித்யாலயா எனப்படும் கே.வி., பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் தமிழகத்தில் 48 பள்ளிகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இன்று முதல் வருகிற 19ம் தேதி மாலை 4 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கேந்திரிய வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. kvsonlineadmission.in என்கிற இணையத்தளத்திலும், அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் விண்ணப்பிக்கலாம்.