கேரள மாநிலம் திருவனந்தபுரம், சாக்கை பகுதியில் இருநாட்களுக்கு முன்பு ரோட்டில் நின்றிருந்த இருவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் சிக்கி சுமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.


இந்த சம்பவம் ஒரு விபத்து என்று எண்ணப்பட்டது. போலிஸார் விபத்து வழக்கு என்பது போல் விசாரனை செய்து வைத்தார்.


ஆனால் விசாரணையின்போது போலிஸாருக்கு இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சிக்கின.


அதில் விபத்து செய்த காரானது சம்பவத்திற்கு சில மணி நேரம் முன்பு சுமேஷுடன் மோதிய கும்பலின் கார் என்பது தெரியவந்தது.


மேலும் விசாரணையில், உயிரிழந்த சுமேஷ் மற்றும் அவரது நண்பர் விபத்து ஏற்படுவதற்கு சில மணிநேரம் முன்பு சாக்கை  பகுதியில் உள்ள தனியார் மதுபானக் கடையில் மது அருந்த சென்றுள்ளனர்.


அந்த மதுபான கடையில் வைத்து சுமேஷுக்கும் இன்னொரு கும்பலை சார்ந்தவர்களுக்கும் இடையே  வாய்த்தகராறு  ஏற்பட்டு சிறு கைகலப்புடன் முடிந்ததாக கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து வெளியே வந்த சுமேஷ் மற்றும் அவருடைய நண்பரும் சாலையின் ஓரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். 


மேலும் படிக்க | இலங்கையில் அவசர நிலை பிரகடனம், அதிபர் முக்கிய அறிவிப்பு 


அதே நேரம் வேகமாக வந்த, கார் ஒன்று இருவரையும் இடித்ததில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். அவர்களின் மீது அதே கார் ஏறியது. இதில் இருவரும் மூச்சு பேச்சு இல்லாமல் விழுந்து கிடக்கின்றனர். 


இதன் சிசிடிவி காட்சிகளில் தெரிந்த காரின் உரிமையாளர்கள், மதுகடையில் சுமேஷ் உடன் தகராறில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்தது. 


இதன் மூலம், இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர். 


தொடர்ந்து அந்த காரில் வந்த மூன்று குற்றவாளிகள்
காட்டாக்கடை பகுதியை சார்ந்த நிஹாஸ், ஷமீர், ரெஜி என்றும், அவர்கள் மூன்று பேர்  மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டறியப்பட்டது.


இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை குற்றவாளியான சுமேஷ் மீது 2014 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான கரலி அனூப் என்பவரை கொலை செய்ததாக வழக்கு பதியப்பட்டது. இதனால், இக்கொலை மதுகடை தகராறு காரணமாக நடைப்பெற்றதா இல்லை, பழைய கொலை வழக்கின் தொடர்ச்சியான பகை காரணமாக நடைப்பெற்றதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR