NEET Exam Dress Code : கேரளாவில் பகீர்! மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன அதிகாரிகள்
NEET Exam Dress Code : கேரளாவில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு அதிகாரிகள் அகற்றச் சொன்னதாக தந்தை புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
NEET Exam Dress Code : மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் பல்வேறு கட்டுபாடுகளுடன் நடைபெற்றது. கேரளாவில் கொல்லாம் மாவட்டத்தில் உள்ள 'Marthoma Institute of Information and Technology' கல்லூரியிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் மேல் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் கூறியதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாணவியின் தந்தை ஒருவர் கைப்பட புகார் கடிதம் எழுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதனால் மன உளைச்சல் அடைந்த தன் மகளால் தேர்வு சரியாக எழுத முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | CBSE 10th 12th Result 2022: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தொடர்பான புதிய அப்டேட்
இது தொடர்பாக கோபகுமார் சூரநாத் (Gopakumar Sooranad)எழுதியிருக்கும் புகார் கடிதத்தில், " என்னுடைய மகள் நீண்ட நாட்களுக்காக நீட் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இன்று அயூரில் இருக்கும் 'Marthoma Institute of Information and Technology' கல்லூக்கு நீட் தேர்வு எழுத சென்ற அவளால் சரியாக தேர்வெழுத முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, அழுது கொண்டே வீடு திரும்பியிருக்கிறாள். விசாரிக்கும்போது, மேல் உள்ளாடையில் இருக்கும் ஹூக்கை அகற்றுமாறு தேர்வுத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். தேசிய தேர்வு முகமை கொடுத்திருக்கும் நெறிமுறைகளில் எங்கும் பிரா ஹூக் தடை குறித்து குறிப்பிடவில்லை. அப்படியிருக்கையில் தேர்வுத்துறை அதிகாரிகள் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
என் மகளுக்கு மட்டும் இந்த பிரச்சனை நடக்கவில்லை. அங்கு தேர்வு எழுதிய நிறைய மாணவிகள் இப்படியான நெருக்கடியை சந்தித்துள்ளனர். பலர் இதை கூறி கண்ணீர்விட்டு அழுதனர். வேறுவழியில்லாமல் பல மாணவிகள் அந்த ஹூக்கை எடுத்துவிட்டு மீண்டும் உள்ளாடையை அணிந்து கொண்டு தேர்வெழுத சென்றனர். தேர்வு அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை தேர்வெழுத வந்த மாணவிகளுக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. இதனால் அவர்கள் தேர்வு சரியாக எழுத முடியவில்லை. மாணவிகளிடம் இப்படி கடுமையாக நடந்து கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. தேர்வெழுத வரும் மாணவிகளிடம் டிரஸ் கோட் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ICSE Class 10 Result: ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு இன்று வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR