திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை! கேரள அரசு
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
திருநங்கைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, கேரள முதல்-மந்திரி பினராயி, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும். கேரள சமூக கோர்ட்டின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குக் கேரள அரசு எடுத்துவரும் முயற்சியின் தொடர்ச்சியாக இது இருக்கும்.
என தெரிவித்துள்ளார்.