கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
பங்குனி மாத திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி திறக்கப்பட்டது. 10 நாட்கள் பெறும் இந்த பங்குனி திரு விழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடந்தது. 28-ம் தேதி நடை சாற்றப்பட்டது.

இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு, தலையில் இருமுடிக் கட்டுடன், 18 படிகள் ஏறி, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார். சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு அவருக்கு பிரசாதம் வழங்கினார்.
இன்று காலை, மாளிகைபுறம் கோவில் அருகே சந்தன மர கன்றுகளை நட்ட பின், கேரள அளுநர் திருவனந்தபுரம் திரும்பிச் சென்றார்.
முன்னதாக, சபரிமலைக் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு, ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ALSO READ | சித்திரை திருவிழா நடத்த அனுமதி கோரும் தமிழக கோவில் ஊழியர்கள் சங்கம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR