புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் டிக்கெட் செலவாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) அளிக்க முன்வந்த ரூ.10 லட்சத்தை கேரளாவின் ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை காங்கிரஸ் கமிட்டி-க்கள் செலுத்துவதாக கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்ததை அடுத்து காங்கிரஸ் இந்த தொகையை வழங்கியதாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் M லிஜு தெரிவித்தார். இந்த தொகையை செலுத்த ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர் அறிவுறுத்தியிருந்தார். எனினும் காங்கிரஸ் கமிட்டியின் இந்த பணத்தை ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது.


செவ்வாய்க்கிழமை, ஆலப்புழாவில் இருந்து பீகாரில் உள்ள பெட்டியா வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்கான புலம்பெயர்ந்த தொழிலாளர் கட்டணமாக அலப்புழா மாவட்ட நிர்வாகத்திற்கு, காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகம் வழங்கியது. இதனிடையே சுமார் 1200 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தங்கள் பயணத்தை அமைக்க துவங்க உள்ளனர்.


ஒரு பயணியின் டிக்கெட் கட்டணம் ரூ.930 ஆகும், இது மாவட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், எந்தவொரு அரசியல் கட்சிகளிடமிருந்தும் ரயில் டிக்கெட் கட்டணமாக பணத்தைப் பெற எந்தவொரு அரசாங்க உத்தரவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட உத்தரவுக்குப் பிறகுதான் நாங்கள் பணத்தைப் பெற முடியும்" என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் பணத்தை நேரடியாக ரயில்வேக்கு நன்கொடையாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று லிஜு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், இதுபோன்ற எந்த முடிவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.