LGBT சமுதாயத்தின் வெற்றி; கேரளாவில் 2 பெண்கள் இணைந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி!
IPC சட்டபிரிவு 377 நீக்கத்திற்கு பின்னர் முதல் முறையாக கேரளாவில் இரு பெண்கள் இணைந்து வாழ்வதற்கு கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!
IPC சட்டபிரிவு 377 நீக்கத்திற்கு பின்னர் முதல் முறையாக கேரளாவில் இரு பெண்கள் இணைந்து வாழ்வதற்கு கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!
இந்தியாவில் ஓரின சேர்க்கை என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கை எதிராக சட்டப்பிரிவு 377 உருவாக்கப்பட்டது. இந்த சட்ட பிரிவு படி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஓரின சேர்க்கை அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் உறவு என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. எனவே ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த சட்டப்பிரிவு நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
இதன்படி கடந்த செப்டம்பர் 6-ஆம் நாள் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377-னை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் முதல் முறையாக ஸ்ரீரிஜா மற்றும் அருணா என்னும் இருபெண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு கேரளா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரிஜா(40). இவருக்கும் நெய்யத்தின்கரை பகுதியை சேர்ந்த அருணா(24) என்பவருக்கும் காதல் ஏற்பட கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒன்றாக இணைந்து வாழ துவங்கியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத அருணாவின் பெற்றோர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் தனது மகள் அருணாவினை, ஸ்ரீரிஜா கடத்தி சென்று வைத்துள்ளதாக புகார் அளித்தனர். இந்த வழக்கினை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் அருணா-ஸ்ரீரிஜா இருவருக்குமான காதலை புரிந்துக்கொண்டு இவர்கள் இருவரும் இணைந்து வாழ அனுமதி அளித்துள்ளது.