பல் தேய்க்காமல் முத்தமிட்டது குத்தமா?... மனைவியை குத்திக்கொன்ற கணவரால் பரபரப்பு
பல் தேய்க்காமல் முத்தமிட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச்சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தீபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
அவினாஷும் தீபிகாவும் அடிக்கடி வாய் சண்டை போட்டுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பெரிதாக அன்போடு அனுசரித்து போனதில்லை என்றும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க அவினாஷ் தன் குழந்தையை தினமும் தூங்கி எழுந்ததும் முத்தமிட்டு கொஞ்சி விளையாடுவார். அவ்வாறு கொஞ்சி முத்தமிடும்போது தீபிகா அவினாஷை பல் தேய்க்காமல் முத்தமிடாதீர்கள் என கண்டித்து வந்துள்ளார்.
ஆனால் அவர் தீபிகாவின் கண்டிப்பை உதாசினப்படுத்திவிட்டு எப்போதும் போல குழந்தையை கொஞ்சுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அவினாஷ் குழந்தையை தூக்கி பல்தேய்க்காமலேயே முத்தமிட்டு கொஞ்சியுள்ளார். இதனால் கோபமடைந்த தீபிகா அவினாஷை திட்டி சண்டையிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சூர்யாவை அழைக்கும் ஆஸ்கர் - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை
அப்போது இருவரும் சரிக்கு சமமாக சண்டையிடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் நிதானம் தவறிய அவினாஷ் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து மனைவி தீபிகாவை குத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தீபிகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் இருவரின் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர். தீபிகாவின் நிலையைக் கண்ட பக்கத்து வீட்டோர் போலீஸாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீபிகா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு கணவர் அவினாஷிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் படிக்க | ’தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன்’ ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR