கேரளாவில் மனைவியைப் பார்க்க பேருந்தை திருடிய ஆண் கைது!
கேரளாவில் ஊரடங்கில் மனைவியைப் பார்ப்பதற்காக பேருந்தை திருடி 200 கி.மீ தூரம் ஓட்டிவந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கேரளா (Kerala) மாநிலம் பதனாம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த தினூப் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கூட்டில் இருந்த அவர், மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க திருவல்லாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். ஊரடங்கின் (Lockdown) காரணமாக பேருந்துகள் இல்லாமல் இருந்துள்ளது. கோழிக்கூடிலிருந்து திருவல்லாவுக்கு இடையில் 270 கி.மீ தூரமாகும்.
ALSO READ | கொரோனா முழு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு
எனவே தனியார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததை அவர் பார்த்துள்ளார். அதைப் பார்த்த அவர், பேருந்தை அங்கிருந்து இயங்கியுள்ளார். பின்னர் அவர் அந்த பேருந்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இரவில் மாவட்ட எல்லைகளைக் கடக்கும்போது காவல்துறையினர் நிறுத்தி பேருந்து செல்வது குறித்து தினூப்பிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, அவர் புலம்பெயர் தொழிலாளர்களை அழைப்பதற்காக பேருந்து செல்வதாக கூறி காவல்துறையிடம் அனுமதி பெற்று அங்கிருந்து சென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான குமரகோம் பகுதிக்கு சென்றபோது அங்கே காவல்துறையினர் மறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தினூப் மாட்டிக்கொண்டார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR