ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கு, கேரள அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளம் வழங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிதியானது கேரள மாநில அரசு அமைத்த ’ஓகி சூறாவளி நிவாரண நிதி’-யில் சேர்க்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



ஓகி புயலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி ஒன்றை கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 29-30-ம் தேதி கடற்கரையில் சூறாவளியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .20 லட்சம் ரூபாயும் மதிப்பிலான பொருட்கள் இதில் அடங்கும்.




கேரள மற்றும் தமிழக கடலோர பகுதியில் ஓகி புயல் மிகப்பெரிய தாண்டவத்தினை நடத்தியது. இதன் காரணமாக கேரளாவில் மட்டும் 64 பேரின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் மீதமுள்ளவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.


இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.