திருவனந்தபுரம்: கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலாக்கலுக்கு (Rape accused Bishop Franco Mulakkal) இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவருக்கு கொரோனா வைரஸ்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (Kottayam Additional District Court) கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலாக்கலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து, அவருக்கு கொரோனா இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை... வெளியான பகீர் தகவல்!


ஜூலை 1 ஆம் தேதி, இந்த வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது, பிராங்கோ (Bishop Franco Mulakkal) ஆஜராகவில்லை. அவர் நலமாக இல்லை என்று முலாக்கலின் தந்தை பீட்டர் கூறினார். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் முலாக்கல் கேரள நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பிஷப்பின் கூற்றுப்படி, அவர் ஒரு கோவிட் -19 நேர்மறை நபருடன் தொடர்பில் இருந்தார் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இடம் ஒரு கட்டுப்பாட்டு மண்டலம் அல்ல (ஜூலை 1 வரை) என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் முலாக்கலின் ஜாமீனை ரத்து செய்து, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தது.


ALSO READ | திருச்சியில் அதிர்ச்சி!! 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பிய துரையூர் வாலிபர்


இந்த வழக்கில் இருந்து முலாக்கலை விடுவிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் ஜூலை 7 ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த மனுவில், பிஷப் தனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறாயினும், கற்பழிப்பு வழக்கில் முலாக்கலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் கூறியது.


2014 முதல் 2016 வரை பல சந்தர்ப்பங்களில் முலாக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி  (Kerala nun rape case) ஜூன் 2018 ஆம் ஆண்டு குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு வெளிவந்த பின்னர், மேலும் மூன்று பெண்களும் முன்னுக்கு வந்து பிஷப் பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட  பிஷப் பிராங்கோ முலாக்கல் 2018 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.


ALSO READ | கேரளா அரசியல் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ள மதங்களுக்கு இடையிலான திருமணங்கள்...