CCTV Video: அரசு பேருந்து பயங்கர விபத்து... சர்ச் சுவரும் இடிந்து விழுந்து பயங்கரம்!
Kerala Accident CCTV Video: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Kerala Pathanamthitta Accident CCTV Video: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கேரள அரசு பேருந்து சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் மீது மோதியவுடன் அங்கிருந்து கிறிஸ்துவ தேவாலய வெளிப்புறச்சுவர் மீது மோதியதில் தேவலாயத்தில் வளைவுச்சுவர் இடிந்து பேருந்தின் மீது விழுந்தது பதிவாகியுள்ளது. இவையனைத்தும் ஒரே சில மணித்துளிகளில் நடந்தது.
மேலும் படிக்க | Tax Evasion: 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானிக்கு பெரும் நிவாரணம்
இந்த விபத்தில் மொத்தம் 16 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து இன்று மதியம் 1.40 மணியளவில் நடந்துள்ளது. அந்த அரசு பேருந்து திருவனந்தரபுரத்தில் இருந்து பத்தனம்திட்டாவிற்கு வந்துகொண்டிருந்தது. பேருந்து அங்கு வந்துகொண்டிருந்த ஒரு காரை வேகமாக முந்திச்சென்றது. அப்போது, அதேபோன்று எதிர்பக்கத்தில் வேகமாக வந்த கார், பேருந்தின் மீது மோதியது. ஓட்டுநர் பேருந்தை சற்று திருப்பியதால், அது நேராக அங்கிருந்த தேவாலயத்தில் மோதியதாக தெரிகிறது.
மேலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகிறது. மோசிய காரில் Xylo மாடல் கார் என தெரியவந்துள்ளது. தற்போது காயமடைந்த 16 பேரில், இருவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | பீதியை கிளப்பும் H3N2 வைரஸ் ! அறிகுறிகளும் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ