கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை.....
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளதால் பக்தர்கள் குவிந்துள்ளனர்....
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளதால் பக்தர்கள் குவிந்துள்ளனர்....
மகரஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை இன்று மாலை 6.35 மணிக்கு நடைபெறுகிறது. பந்தளத்தில் இருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.
கேரள பஞ்சாகப்படி, சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நாள், மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், கேரள மாநிலம் பொன்னம்பல மேட்டில், சுவாமி அய்யப்பன் ஜோதி ரூபமாக காட்சி தருவதாக ஐதீகம். இந்த தரிசத்தை காண, ஆண்டு தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் இருந்து, சமரிமலைக்கு வருகின்றனர்.
இன்று மாலை, பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணங்கள் எடுத்து வரப்பட்டு, சபரிமலை அய்யப்பனுக்கு அணிக்கப்படும். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையை தொடர்ந்து, கருடன் எனப்படும் பட்சி வானத்தில் வட்டமிடும், அப்போது, வானத்தில் விசேஷமான நட்சத்திரம் தென்படும்.
அதன் பின், சற்று நேரத்தில், பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தென்படும். மிகக்குறுகிய கால அவகாசம் மட்டுமே தென்படும். இதனைக் காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.