கொல்லம் (Kollam): கேராளாவை சேர்ந்த ​​27 வயதான அனுஜித் 2010 ஆம் ஆண்டில்,  ஒரு பெரிய ரயில் விபத்தைத் தவிர்க்க உதவி செய்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார். அப்போது அவர் பெரிது பேசப்பட்டார். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 14 அன்று கேரளாவின் கொல்லத்தில் கொட்டாரக்காரா அருகே, பைக் விபத்த்தில் அனுஜித் இறந்து விட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், ஹீரோக்கள் ஒருபோதும் இறப்பதில்லை. தனது மரணத்தில் கூட, இந்த இளைஞர் எட்டு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஜூலை 17 அன்று அவர் மூளை இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர் அவரது குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்தனர். அவரது மனைவி பிரின்சி மற்றும் சகோதரி அஜல்யா அவரது இதயம், சிறுநீரகங்கள், கண்கள், சிறுகுடல் மற்றும் கைகளை தானமாக வழங்க முன்வந்தனர். 


அவரது இதயம் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் இருந்து கொச்சியில் உள்ள லிசி (Lisie) மருத்துவமனைக்கு பறந்து சென்றது. அங்கு திரிபுனித்துராவைச் சேர்ந்த 55 வயதான சன்னி ஜோசப்  உயிரை காப்பாற்றியது.


ALSO READ | அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!


இந்த உறுப்பு தானம் மாநில அரசின் மிருதசஞ்சீவானி என்ற கேரள அரசு உடல் உறுப்பு தானத்திற்கான நெட்வொர்க் மூலம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் உத்தரவுப்படி, மாநில அரசு ஒரு ஹெலிகாப்டர் மூலம், செவ்வாயன்று எர்ணாகுளத்தில் உள்ள ஹையாட் ஹோட்டலில் இருந்து அனுஜித்தின் உறுப்புகளை தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டது.


கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் நெருங்கிய உறவை பறிகொடுத்த துக்கத்திலும், அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட, இந்த மனிதாபிமான நடவடிக்கைகாக பாராட்டினர்.


ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த அனுஜித் சமீபத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கோட்டாரக்காராவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனையாளராக சேர்ந்தார். இவருக்கு மனைவி பிரின்சி மற்றும் மூன்று வயது மகன் உள்ளனர்.


ALSO READ | சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் நடக்கும் IAF கமாண்டர்கள் நிலையிலான மாநாடு


2010 ஆம் ஆண்டில், அனுஜித் ஒரு ரயில் விபத்தைத் தவிர்ப்பதற்காக தைரியமாக நடவடிக்கை எடுத்தார். ரயில் பாதையில் ரயில் ஓட்டுநரை எச்சரிக்க அனுஜித் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு சிவப்பு கூடையை அசைத்து, டிரைவரை எச்சரித்து  நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றினர்.