நாட்டில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில் மண்எண்ணெய் உபயோகிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு கொண்டு மத்திய அரசு இன்னும் 2 ஆண்டுகளில் மண்எண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை வருகிற 2020-ம் ஆண்டு முதல் முழுவதும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.  


பொதுவாக நாட்டில் உள்ள கிராமப் புறங்களில் கூட  சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதுதான். முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கருது தெரிவித்துள்ளனர். 


அதற்காக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலமும், சவுபாக்யா திட்டம் மூலமும் 100 சதவீதம் மக்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம் மண்எண்ணெய் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


மண்எண்ணெய்க்கு மட்டும் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.7.595 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது ரூ.4.500 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைவு என அதிகாரிகள் கருத்து  தெரிவித்துள்ளனர்.  


அதற்கு முன்னோடியாக சில மாநிலங்களுக்கான மண்எண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மண்எண்ணெய் வேண்டாம் என்றும் ஆந்திர பிரதேசம், சண்டிகார், டெல்லி, டாமன் மற்றும் டையூ, அரியானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஒதுக்கீட்டு செய்து விட்டன.  


மேலும், பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று  கருத்து தெரிவித்தார்.