கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே, கடந்த சனிக்கிழமையன்று புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய வரவேற்ப்பு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடனும் இந்தியாவுக்கு வந்துள்ள அவர் இந்தியாவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.



இந்நிலையில், கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத சீக்கிய அமைப்பின் உறுப்பினராக இருப்பவர் ஜஸ்பால் அத்வால். இவர், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.



இவருடன் தற்போது இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மனைவி சோஃபி புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மும்பையில் பிப்.,20 ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோஃபி, அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜஸ்பாலுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என கனடா பிரதமர் தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரை நேற்று சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை பற்றி தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானது.