நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக்காக்கவும் ,  இத்துறையின் புதிய வளர்ச்சி திட்டங்களுக்காக நிதியை திரட்டவும் மத்திய அரசு தனது 2016-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் "கிரிஷி கல்யான் செஸ்" என்ற கூடுதல் வரியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்றுமுதல் (ஜூன் 1) நடைமுறைக்கு வருவதால் நாம் அன்றாடும் பெறப்படும் சேவைகளில் கூடுதல் பணம் செலவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:-


*மொபைல் கட்டணம், டிடிஹெச் சேவை, மின்சாரம் கட்டணம் போன்றவை உயரும்


*ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்  கட்டணம் உயரும்


*விமான டிக்கெட் மற்றும் பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட்  கட்டணங்களும் உயரும்


*அனைத்து விதமான வங்கி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகள் கட்டணங்களும் உயரும்


*கேப் மற்றும் டாக்ஸி கட்டணங்களும் உயரும். 


*பியூட்டி பார்லர், சலவை சேவை, திருமணம் நிகழ்சி போன்றவற்றில் கட்டணம் உயரும்


*பங்குச் சந்தையின் வர்த்தகக் கட்டணங்கள் மற்றும் கொரியர் சேவை கட்டணங்களும் உயரும்


*திரைப்படம், இசைக் கச்சேரி, மதுபானம், தீம் பார்க் போன்ற கட்டணங்களும் உயரும்.