மத்திய அரசின் 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23 அன்று ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline - NMP) வெளியிட்டார்.
National Monetisation Pipeline: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) ஆகஸ்ட் 23 அன்று ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline - NMP) வெளியிட்டார். இதில் பயணிகள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் முதல் விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் வரை உள்கட்டமைப்புத் துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய பணமாக்கல் திட்டத்தை, மத்திய அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் சொத்துக்களை பணமாக்குவதன் மூலம், அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் திட்டம் இது என மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை கூறியுள்ளது.
இதில் ரயில்வே துறையை பொறுத்தவரை மொத்தம் 400 நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், ரயில்வே ஸ்டேடியங்கள் மற்றும் காலனிகள் மற்றும் கொங்கன் மற்றும் மலை துறை ஆகியவை ரயில்வே துறையில் பணமாக்குதலுக்காக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட சொத்துக்களில் ஒன்றாகும். ரயில்வே சொத்துக்கள் ரூ .6 லட்சம் கோடி தேசிய பணமாக்கல் திட்டத்தில் 26 சதவீதம் பங்களிப்பு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!
சிய சொத்து பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2025 ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் ரூ 1.60 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை சொத்துக்கள் பணமாக்கப்படும். நெடுஞ்சாலை சொத்துக்கள் 2022 முதல் 2025 வரை 26,700 கிமீ வரை பணமாக்குதலுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
அதே போன்று தேசிய தலைநகரில் உள்ள பல வீட்டு காலனிகள் மற்றும் எட்டு ITDC ஹோட்டல்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு, தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ், 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை பணமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதி ஆயோக் தயாரித்த ஆவணத்தின்படி, நகர்ப்புற ரியல் எஸ்டேட் சொத்துகள் பணமாக்கப்படுகின்றன. 2022-25 நிதியாண்டுகளில் சுமார் ரூ .15,000 கோடி நிதி கிடைக்கும் என கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையில், 12,828 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ .6 லட்சம் கோடி தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் பணமாக்கப்படும்.
ALSO READ | Finance Ministry: என்று முடிவுக்கு வரும் வருமான வரித்துறை இணையதளக் கோளாறு Infosys?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR