Vehicle Scrappage Policy: பிரதமர் நரேந்திர மோடி இன்று  பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கையை தொடக்கி வைத்தார். குஜராத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கொள்கையைத் தொடக்கி வைத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கொள்கையை 2021ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை (Vehicle Scrappage Policy) பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த கொள்கை நாட்டில் ரூ .10,000 கோடி முதலீட்டை கொண்டு வரும். பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கட்டமைப்பின் மூலம், அதற்கான வேலை வாய்ப்புகள் பெருகும்.  மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வளர்ச்சியை துரிதப்படுத்தும் இந்த கொள்கை மூலம் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு புதிய அடையாளம் கிடைக்கும். 


இந்த கொள்கை இப்போது கட்டாயமாக்கப்படவில்லை


பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் இந்தக் கொள்கையைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார், அதன் பிறகு கொள்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், பழைய வாககங்களை அப்புறப்படுத்த அல்லது ஒழிப்பதற்கான இந்த புதியகொள்கை தன்னார்வ அடிப்படையில் ஆனது. இந்தக் கொள்கையின் கீழ், வாகனங்களின் பிட்னஸ் பரிசோதனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பழைய காரை ஒழிப்பதால் 4  முக்கிய நன்மைகள் இருக்கும்


இந்தக் கொள்கையை பிரபலமாக்க, அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. இதனால், சாதாரண குடும்பங்களும் எல்லா வகையிலும் பெரிதும் பயனடையும் என்று பிரதமர் மோடி கூறினார். பழைய வாகனத்தை அப்புறப்படுத்தினால் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வைத்திருப்பவர் புதிய வாகனம் வாங்கும் போது பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டியதில்லை. இதனுடன், அவருக்கு சாலை வரியிலும் சில விலக்கு அளிக்கப்படும். இரண்டாவது நன்மை என்னவென்றால், பழைய வாகனத்தின் பராமரிப்பு செலவு, பழுதுபார்க்கும் செலவு, எரிபொருள் வீணாவது ஆகியவை இதன் மூலம் சேமிக்கப்படும். மூன்றாவது நன்மை நேரடியாக நமது வாழ்க்கையுடன் தொடர்புடையது, பழைய வாகனங்கள், பழைய தொழில்நுட்பம் காரணமாக, சாலை விபத்து அபாயம் மிக அதிகம். எனவே இதன் மூலம் அந்த ஆபத்துக்கள் குறையும். நான்காவது, மாசுபாட்டால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை அது குறைக்கும்.


ALSO READ | பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் திட்டம் ஒரு முக்கிய மைல் கல் : பிரதமர் மோடி


இது குறித்து மேலும் கூறிய பிரதமர் மோடி, எத்தனால் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளுக்கு  அரசாங்கத்தின் முன்னுரிமை அளிக்கிறது என்று கூறினார். R & D முதல் உள்கட்டமைப்பு வரை, தொழில் துறை இதனால் மேம்படும் என்றும், இதற்கான உதவிகளை தர அரசு தயாராக உள்ளது எனவும்  பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியாவிற்கு  உத்வேகம் அளிக்க, இந்தியாவில் தொழில் நிலைத்திருக்கவும் உற்பத்தி மேம்படவும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பழைய வாகனங்கள் அழிக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய எஃகு உலோகம், தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியா தற்போது ரூ .23,000 கோடி மதிப்புள்ள எஃகு, இரும்பை இறக்குமதி செய்கிறது.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR