கொச்சி விமான நிலையம் 2 மணி முதல் மீண்டும் துவங்கியது...!
இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் கொச்சியில் விமான சேவை துவங்குவதாக கொச்சியில் விமானநிலையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு....!
இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் கொச்சியில் விமான சேவை துவங்குவதாக கொச்சியில் விமானநிலையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு....!
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
வெள்ளம் காரணமாக கேரளாவில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், வெள்ளம் உள்வாங்கியதை அடுத்து சீரமைப்பு பணிகள் மற்றும் பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் கொச்சியில் விமான சேவை துவங்குவதாக கொச்சியில் விமானநிலையம் அதிகாரபூர்வமான அறிவிப்பை அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.