ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர், பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் தனது ‘கேன்சல் செய்த டிக்கெட்டின்’ பணத்தை தற்போது திரும்பப் பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற பகுதியை சேர்ந்த சுஜித். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டாவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர், சொந்த காரணங்களுக்காக அந்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். 


சுஜித்தின் டிக்கெட் தொகை ரூ.765, இதில் 65 ரூபாய் பிடித்தம் போக 700 ரூபாய் அவரது அக்கவுண்டிற்கு திரும்ப வந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு நூறு ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, ரூ.665 மட்டுமே திரும்ப வந்துள்ளது.


இதைத் தொடர்ந்து, தனக்கு நியாயமாக வரவேண்டிய 35 ரூபாயை பெற அவர் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார். சுஜித்தின் கோரிக்கையினை ஏற்று அவருக்கு ரூ.2 மட்டுமே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மனம் தளராத சுஜித் தொடர்ச்சியாக மீதியுள்ள 33 ரூபாயை பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முறை நேரில் சென்றும் கடிதம் மூலமாகவும் ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இரண்டாண்டு கால போராட்டத்திற்கு பின்னர் அவர் பிடித்தம் செய்யப்பட்ட அந்த 33 ரூபாயை திரும்பப் பெற்றுள்ளார். 
பிடித்தம் செய்யப்பட்ட ரூபாய்கான காரணமாக ரயில்வேதுறை தெரிவிக்கையில் "சுஜித் டிக்கெட் முன்பதிவு செய்த போது ஜிஎஸ்டி இல்லை. ஆனால் ஜூலை மாதம் சுஜித் பயணிக்க இருந்த காலத்தில் ஜிஎஸ்டி அமலில் இருந்தது. அதன்படி, ஜிஎஸ்டி வரி 35 ரூபாய் சுஜித்துக்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதற்கான விதிமுறைகள் மாறியுள்ளதால் அவருக்கு அந்த தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.


இந்த செய்தி தற்போது சமூகவ வலைத்தளங்கள், இணையதளங்களில் வைரலாகி வருகிறது.