14 MLA-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த விவகாரம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், நேற்றி காலை 11.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ்குமார் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற MLA-க்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். 


சபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் MLA-க்கள் 11 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் MLA 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுளனர். ஏற்கனவே, 3 MLA-க்கள் கட்சிதாவல் தடுப்பு சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 


இந்நிலையில் MLA-க்கள் தகுதி நீக்கம் குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.


முன்னதாக கர்நாடகாவில் HD குமாரசாமி தலைமையிலான ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு உதவியுடன் கவிழ்க்கப்பட்டதை அடுத்து எடியூரப்பா நான்காவது முறையாக மாநில முதல்வராக நேற்றைய தினர் பதவி ஏற்றார். 


கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை எதிர்த்து MLA பதவியை 15 பேர் ராஜினாமா செய்தது ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து அந்த 15 பேரையும் மீண்டும் தேர்தலில் நிற்க விடாமல் செய்வதற்காக அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 


மேலும் அதிருப்தி MLA-க்களை தகுதி நீக்கம் செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னதாக கடந்த வியாழன் அன்று அதிருப்தி MLA-க்களில் 3 பேரை கட்சிதாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். மற்ற அதிருப்தி MLA-க்களையும் தகுதி நீக்கம் செய்ய ஆலோசித்து வந்தார். இந்நிலையில் மற்ற அதிருப்தி MLA-க்களையும் சபாநாயகர் நேற்றைய தினம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


இந்த பரபரப்பான சூழலில் இன்று எடியூரப்பா அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.