ரத்த டெஸ்ட் எடுக்கவந்த பெண்ணை கற்பமாக்கிய லேப் டெக்னீசியன்..!
டெல்லி அரசு மருத்துவமனைக்குள் 17 வயது சிறுமியை லேப் டெக்னீசியன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது!!
டெல்லி அரசு மருத்துவமனைக்குள் 17 வயது சிறுமியை லேப் டெக்னீசியன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது!!
டெல்லி அரசு மருத்துவமனையில், 17 வயது பெண்ணை, அந்த மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்துக்குள் வேலை பார்க்கும் லேப் டெக்னீசியன் ஒருவர் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசாங்க மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் வேலை பார்க்கும் ஒரு லேப் டெக்னீசியனுக்கு நிறைய பெண்களின் நட்பு உண்டு. இதனால் அவரை பார்க்க நிறைய பெண்கள் அடிக்கடி வருவார்களாம். அப்படி வந்த பெண்களில் ஒரு பெண் அவரிடம் அங்கு வேலை கேட்டுள்ளார் .உடனே அவரும் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். இதனால் அந்த பெண் அடிக்கடி அவரை பார்க்க வருவதும், போனில் பேசுவதும், சமூக ஊடகத்தில் சேட்டிங் செய்வதுமாக இருந்தார்.
ALSO READ | புகார் கொடுக்க வந்த பெண்ணை நடனமாட வற்புறுத்திய காவல் அதிகாரி!!
இந்நிலையில், ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று அந்த லேபுக்கு அவரை பார்க்க வந்த அந்த பெண்ணை அந்த மருத்துவமனையின் ஆய்வுகூடத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் மறுநாள் இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறியதும், அவர் உடனே போலிஸில் அந்த நபர் மீது புகார் தந்தார் .போலீசார் அந்த டெக்னீஷியனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.