குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு, மத்திய பாஜக அரசு கொண்டுவந்த திருத்தங்களை, மாநிலங்களவை நிராகரித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை.


இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மத்திய பாஜக அரசு, நடப்பு நாடாளுமன்ற தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை, கடந்த திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவை கூடியபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார். 


இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குய்ர்த்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்... இந்தியா மற்றும் நமது தேசத்தின் இரக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள். குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி. ஆதரவாக ஓட்டளித்த MP-க்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல ஆண்டுகளாக துன்புறுத்தலை எதிர்கொண்டவர்களுக்கு இந்த மசோதா நிவாரணம் அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார். 



மேலும், ஒரு ட்விட்டர் பதிவில்... குடியுரிமை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில்நிறைவேறியதன் மூலம், கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தீர்மானத்தை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.