வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட கேரளா செல்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் 3 வாரங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 97-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். 


கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.


கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 



இந்நிலையில் கேரளாவின் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்ளிடன் கேட்டறிந்ததாகவும், இன்று மாலை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட கேரளா செல்கின்றேன் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்!