மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா! விபத்துக்குள்ளாக இருந்த ஹெலிகாப்டர்-திக் திக் வீடியோ
Minister Amit Shah Helicopter Accident Latest News : மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Minister Amit Shah Helicopter Accident Latest News : மத்திய அமைச்சர் அமித்ஷா, பீகார் அருகே சென்று கொண்டிருந்த போது அவர் சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாக இருந்தது. தற்போது அதில் இருந்து தப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் பெகுசாராய் வழியாக சென்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடைப்பெற்றிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரம்:
மக்களவை தேர்தல் 2024, பல்வேறு மாநிலஙகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக கட்சி சார்பாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலம் பெகுசாராய் நகரில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர் மற்றும் முக்கிய் உறுப்பினர்களையும் கடுமையாக விமர்சித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் ஹெலிக்காப்டரில் பயணித்திருந்தார். அப்போது, தரையை விட்டு அவரது ஹெலிகாப்டர் பறந்த உடனேயே அந்த விமானத்தின் பேலன்ஸ் தவறியது. பின்னர், அதிவேக காற்று காரணமாக அங்கும் இங்கும் சில வினாடிகள் அலைமோதிய அந்த விமானம், பின்னர் நிதானம் அடைந்தது. விமானத்தை ஓட்டியவர் தெளிவாக யோசித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..
வீடியோ விவகாரம்!
சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் அமித்ஷா, சிறுபான்மையினருக்கு கொடுத்துள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. இதை, காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டது. இதையடுத்து, தெலங்கானாவின் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை வரும் மே 1ஆம் தேதி, செல்போனோடு விசாரணைக்கு டெல்லி போலீஸார் அழைத்திருக்கின்றனர்.
அமித்ஷாவின் அந்த வீடியோ, பொய்யாக திரிக்கப்பட்டது எனவும் இதை வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சியினர் செட் செய்திருப்பதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ