முன்னாள் முதலமைச்சர் மகள் கவிதா கைது... மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
MLC Kavitha Arrested By ED Latest News: டெல்லி மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில், தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும் கே.சி.சந்திரசேகர ராவின் மகளுமன கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையை கண்டித்து தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவிதாவுக்கு இந்த வழக்கிற்குமான தொடர்பு
இந்த ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அமித் அரோரா என்பவர் விசாரணையின் போது கவிதாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, South Group என்ற மதுபானம் சார்ந்த லாபி ஒன்று உள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டும் நிலையில், அந்த லாபி விஜய் நாயர் என்ற மற்றொரு குற்றவாளியன் மூலம் 100 கோடி ரூபாயை பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும் படிக்க | தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அமலாக்கத்துறையின் சம்மன்கள்
அந்த South Group லாபியின் பொறுப்பாளர் கவிதாவின் வணிக கூட்டாளி ஒருவர்தான் எனவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி வருகிறது. இதே வழக்கில்தான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பி வருகிறது. இருப்பினும், இதுவரை 8 சம்மன்கள் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகாவில்லை.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராக கூறி கவிதாவுக்கு இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. கவிதா அந்த சம்மனை புறக்கணித்த நிலையில், விசாரணைக்கும் ஆஜாரகவில்லை. குறிப்பாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை கவிதாவுக்கு சம்மன் அனுப்ப முடியாது உத்தரவு அளித்திருந்தது.
கவிதா குற்றச்சாட்டு
அதன் அடிப்படையிலேயே, ஜனவரி 16ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அனுப்பியிருந்த சம்மனை கவிதா தரப்பு புறக்கணித்தது. இருப்பினும், அது உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அளித்த உத்தரவு தற்காலிகமானதுதான் என்றும் அது தற்போது செல்லுபடியாகாது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
மதுபான கொள்கை வழக்கில் கவிதா கடந்தாண்டு மூன்று அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குறிப்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணையின் போது கவிதாவின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. எப்போதும் இதுகுறித்து கவிதா கூறுகையில், இதில் தான் எவ்வித முறைகேடும் செய்யவில்லை எனவும், பாஜக தலைமையிலான மத்திய அரசு, அமலாக்கத்துறையை தவறான வழியில் பயன்படுத்தி தெலங்கானாவில் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து ஆட்சியமைக்க முயற்சிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி வந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ