பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை காலை 9.29 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுண் தொடங்கியது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. 


அந்தவகையில், நாளை 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும். 


வான்வழி மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பெறும் வகையில் இந்த செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.29 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.