நடிகர் கமல்ஹாசன் தற்போது 4 மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதையடுத்து, அவர் விசில் செயலி மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் நேரலையில் மக்களை சந்தித்து பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக முன்னதாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 


"நான் இன்று வணக்கம் டிவிட்டர் நேரலையில் வர இருக்கிறேன். என்னிடம் கேட்க கேள்விகள் இருந்தால் என்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில் கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற ஹேஷ்டேக்கில் என்னிடம் கேட்கலாம். நான் அவற்றிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். காத்திருங்கள்" என்றார்.


இந்நிலையில், நேற்று அவர் தொகுப்பளினி திவ்யதர்ஷினி உரையாடும் போது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.


சினிமா நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய மாற்றத்துக்கு நான் முன் உதாரணமாக உத்வேகமாக எடுத்து கொண்ட நபர் மகாத்மா காந்தி என்றார். என்னெனில், என் தந்தை எப்படி என்னையும் என் சகோதரர்களையும் நேர்மையானவர்களாக வளர்த்தெடுத்தாரோ அதுபோல் தன் கட்சி தொண்டர்களை பார்த்துக் கொள்வேன். ஊழல்வாதிகள் கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவேன் என்றார்.  


அதேபோன்று நான் மக்களுடன் உரையாட ட்விடரை பயன்படுத்துவது, என்பது மருது சகோதரர்கள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக போர் பிரகடனத்திற்கு கோயில் சுவர்களை பயன்படுத்தினார்களோ அது போல் என் கருத்துகள், எதிர்ப்புகள் மற்றும் கோபங்களைத் தெரியப்படுத்தவே டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்துகிறேன் என்றார்.