என்னடா இது ராஜஸ்தான் சிறுத்தைக்கு வந்த சோதனை!
ராஜஸ்தானின் கெர்வாரா பகுதியில் உணவின்றி சோர்ந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது!
ராஜஸ்தான்: ராஜஸ்தானின் கெர்வாரா பகுதியில் உணவின்றி சோர்ந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது!
ராஜஸ்தான் மாநிலம் கெர்வாரா பகுதியின் வனப்பகுதி அருகே, 2 வயது சிறுத்தை குட்டி ஒன்று மயங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
சம்பவத்திற்கு வந்த வனத்துறையினர் அச்சிறுத்தையினை மீட்டு சஜ்ஜங்கர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தையினை சோதித்து பார்கையில் அது உணவு மற்றம் தண்ணீர் பற்றாக்குறையால் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிவித்தனர்.
தற்போது சஜ்ஜங்கர் உயிரியல் பூங்காவில், சிறுத்தை பாதுகாப்பாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.