கேரளா வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், கேரளா வெள்ள நிவாரண நிதியாக 210மில்லியன் சேர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா தற்போது மீண்டு வருகிறது. எனினும் ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீள 5 மாதங்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாதக கேரளாவை மீட்டெடுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி தேவைப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கேரளா வெள்ள பாதிப்பு பகுதிகளை மீட்டெடுக்கு இதுவரை 700 கோடி ரூபாய் ஜக்கிய அரபு அமிரக்கத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அரபு நாடுகளில் மலையாளிகள் அதிக அளவில் வசித்து வருவதால், மலையாளிகளின் இரண்டாவது வீடாக கருதப்படும் அரபு அமிரகத்தில் இருந்து 700 கோடி நிதி வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பாதிக்கப்பட்ட கேராளவினை மீட்டெடுப்பது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 30-ஆம் நாள் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டுள்ள கேரளத்தினை புதிய கேரளமாக உருமாற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.