ஆயுதத் திருத்த மசோதா திங்களன்று நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், திருமண விழாக்களில் கேளிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் விதுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர, சில புதிய வகை குற்றங்களும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.  மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து தெரிவிக்கையில்., தற்போதைய காலக்கட்டத்தில் காவல்துறையினரை அழைத்த அடுத்த 30 நிமிடங்களில் அவர்கள் குற்றச்சம்பவம் நடக்கும் இடங்களில் இருப்பர். எனவே மக்கள் ஆயுதங்களை தங்கள் அருகிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மசோதா குறித்த தகவல்களை அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, உரிமம் பெற்ற ஆயுதங்கள் காரணமாக துப்பாக்கிச் சூட்டில் யாரும் கொல்லப்படுவதில்லை என்பது தவறான கருத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். 


தகவல்கள் படி 2016-ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தில் 191 பேரும், பீகாரில் 12 பேரும், ஜார்க்கண்டில் 14 பேரும் உரிமம் பெற்ற ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு காரணமாக இறந்துள்ளனர் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுருந்தார்.


சட்டரீதியாக ஒரு நபருக்கு 2 ஆயுதங்களுக்கு உரிமம் வழங்க உரிமை உண்டு. உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன் உரிமத்திற்கு மின் உரிம ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.