கர்நாடகாவில், கடக் மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்தின் தலைவராக முஸ்லிம் மதத்தை சேர்ந்த திவான் ஷரீப் முல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12ம் நூற்றாண்டில் தோன்றிய லிங்காயத் சீர்திருத்தவாதியான பசவண்ணாவின் போதனைகளை பின்பற்றி வந்துள்ளனர். சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீஜகத்குரு முருகராஜேந்திர மாதா மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 361 மடங்களில் கடக் மாவட்டத்தில் உள்ள மடமும் ஒன்று. 


கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகப்பெரிய மடமாக இந்த லிங்காயத்து மடம் விளங்குகிறது. பசவண்ணரின் தத்துவங்கள் உலகளவில் புகழ்பெற்றவை.


12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி பசவண்ணர், சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்டார். ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் போதனைகளைக் கற்பித்தார். அவரது போதனைகளைப் பின்பற்றியே இந்த மடம் திறக்கப்பட்டது. இங்கு எந்த மதத்தினரும் வரலாம். 


சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார்.


பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைப் பின்பற்றி நம்மிடம் லிங்க தீட்சையும் பெற்றுள்ளார். ஷரீஃப் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர்  10ம் தேதி தீட்சை பெற்றார். அவருக்கு லிங்காயத்து மதத்தின் அடிப்படையான முக்கிய விஷயங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் சிவயோகி கூறுகிறார்.


இந்நிலையில் கர்நாடகாவில், கடக் மாவட்டத்தில் உள்ள லிங்காயத் மடத்தின் தலைவராக தான் ஷரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் வரும் புதன்கிழமை, மடத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.