மிகக் குறைந்த காற்று மாசுபாடு உள்ள 10 Indian Cities இவைதான்: உங்க ஊர் இதுல இருக்கா?
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், வட இந்தியா மீண்டும் காற்றின் தரத்தைப் பொறுத்தவரை ஆண்டின் மிக மோசமான நேரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
புதுடில்லி: 21 ஆம் நூற்றாண்டில், காற்று மாசுபாடு (Air Pollution) மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மனித ஆரோக்கியத்தை பாதிப்பதைத் தவிர, வளிமண்டலத்தில் உள்ள மாசுபாடுகள் காலநிலையையும் மாற்றியமைக்கின்றன. இதன் மூலம் நமது கிரகத்தில் வசிக்கும் மில்லியன் கணக்கான உயிரினங்களின் பிழைப்புக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
உலக காற்று தர அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டில் உலகில் அதிக அளவு மாசுபாடு கொண்ட 21 நகரங்களின் பட்டியலில், காசியாபாத், டெல்லி, லக்னோ ஆகிய இந்திய நகரங்களும் (Indian Cities) இடம் பெற்றிருந்தன. இந்த பட்டியல் PM2.5 அளவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் பகிர்ந்துகொண்ட தரவுகளின் உதவியுடன் IQAir இந்த பட்டியலை தொகுத்தது.
ALSO READ: November 3-க்கு பிறகு சென்னையில் அதிக மழைக்கான வாய்ப்பு, மக்களே உஷார்!!
இந்தியாவில் சுவாசிக்கும் காற்று தூய்மையாக உள்ள 10 நகரங்கள்
இந்தியாவில், காற்று மாசுபாடு அனைத்து இடங்களிலும் இருப்பதாக பலர் நினைக்கலாம். ஆனால் இது உண்மையல்ல. ஏனெனில் இந்தியாவில் பல நகரங்களால் வெற்றிகரமாக காற்றை சுத்தமாக வைத்திருக்க முடிந்துள்ளது. IQAir இன் தரவை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட பட்டியலின் படி, 2019 ஆம் ஆண்டில் PM2.5 நிலைகளின் அடிப்படையில் இந்தியாவில் குறைந்த அளவிலான காற்று மாசுபாடு கொண்ட 10 நகரங்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
RANK | CITY | PM2.5's 2019 average (µg/m³) |
1 | சத்னா (மத்திய பிரதேசம்) | 15.5 |
2 | கும்போரி (மகாராஷ்டிரா) | 20.3 |
3 | ஹல்தியா (மெற்குவங்கம்) | 25.9 |
4 | திருப்பதி (ஆந்திர பிரதேசம்) | 26.4 |
5 | கடியா கலன் (மத்திய பிரதேசம்) | 27.7 |
6 | திருவனந்தபுரம் (கேரளா) | 27.9 |
7 | சிக்கபல்லபூர் (கர்நாடகா) | 28.8 |
8 | படிண்டா (பஞ்சாப்) | 31.0 |
9 | பெங்களூரு (கர்நாடகா) | 32.6 |
10 | அமராவதி (ஆந்திர பிரதேசம்) | 33.0 |
வட இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது
இதற்கிடையில், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், வட இந்தியா மீண்டும் காற்றின் தரத்தைப் பொறுத்தவரை ஆண்டின் மிக மோசமான நேரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு வியாழக்கிழமை, 'severe’ அதாவது கடுமையான நிலைக்கு சென்றது. சிறிது நேரம் அதில் இருந்த அளவுகள் மீண்டும் ‘very poor’ அதாவது மிகவும் மோசமான நிலைக்கு வந்தன.
தேசிய தலைநகரின் PM 2.5 மாசுபாட்டில் விவசாயக் கழிவுகளின் எரிப்பால் ஏற்படும் மாசுபாட்டின் பங்கு வியாழக்கிழமை 36 சதவீதமாக உயர்ந்தது என மத்திய அரசால் இயக்கப்படும் சஃபர் தெரிவித்தது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் மேம்பட்ட காற்றோட்டம் காற்றின் தரத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி-என்.சி.ஆரில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கான கட்டளை
மேலும், இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு அரச கட்டளையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட கட்டளையின் கீழ், சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையம் (EPCA) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக 18 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது: வானிலை ஆய்வு மையம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR