புதுடில்லி: அயோத்தி வழக்கு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு (Live telecast) செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து ஆர்.எஸ்எஸ் (RSS) சித்தாந்தவாதி கே.என் கோவிந்தாச்சார்யா (KN Govindacharya) தாக்கல் செய்த மனு மீது, இன்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அயோத்தி வழக்கில் நேரலை செய்ய சம்மதம் தெரிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


முன்னதாக, கடந்த, புதன்கிழமை (செப்டம்பர் 11) ஆம் தேதி ராம்ஜன்மபூமி - பாப்ரி மஸ்ஜித் வழக்கை தினசரி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற மனுவை செப்டம்பர் 16 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது. அந்தவகையில் இன்று, இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.